சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே
கீழடி பள்ளிச்சந்தை புதூரில், மத்திய தொல் பொருள் துறையினர் மேற் கொண்ட
அகழ்வாராய்ச்சி யில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம்
புதையுண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் கூறியதாவது:
செவிவழிச் செய்தி களில் குறிப்பிடப்படும்
தகவல்களை உரிய கல் வெட்டுகள், சான்றுகளு டன் நிரூபிப்பது அகழ்வா
ராய்ச்சியாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரமான மதுரை
குறித்து நடை பெறும் முதல் விரிவான அகழ்வாராய்ச்சி இது வாகும். தற்போது
மதுரை வளர்ச்சியடைந்த நகராக உள்ளது. அங்கு அகழ்வா ராய்ச்சி செய்வது சிரம
மான காரியம்.
எனவே, மதுரையை ஒட்டிய தொன்மையான பெயரில் தற்போதும் வழங்கப்படும் கிராமங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டோம்.
பழைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி வைகை
நதி தொடங்கும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் அழகன்குளம்
வரை 293 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாண்டியர்கள் ஆட்சிக்
காலத்தில் மணலூர் கிரா மம் தலைநகராக இருந் ததாக செவிவழிச் செய்தி
ஒன்றுள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில், அந்தக்
கிராமத்தைச் சுற்றி கல்வெட்டுகள், முதுமக் கள் தாழிகள் போன்றவை ஏராளமாக
கண்டெடுக் கப்பட்டுள்ளன. அதில், சங்க காலத்தில் குறிப் பிடப்பட்ட
குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என் பது மருவி தற்போது கொந்தகையாக உள்ளது.
திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை
புதூர் என்பது வணிகர்களோடு தொடர்புடைய ஊர் என்பதை கண்டறிந்தோம். இங்கு
நடத்தப்பட்ட அக ழாய்வில் சங்க கால வீடுகள், அம்மக்கள் பயன் படுத்திய வீட்டு
உபயோ கப் பொருள்கள், உலோ கங்கள், கண்ணாடி, மண் பாண்டங்கள், அணிகலன் கள்
கிடைத்து வருகின் றன.
மேலும் வெளிநாடு களோடு வணிகத் தொடர் பில்
இருந்ததற்கான ஆதாரமாக ரோமானிய நாட்டின் உயர்ரக மண் பானைகளான ரவுலட் மற்றும்
ஹரிட்டைன் மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.
மேலும் பானையின் உட்புறம் கருப்பாகவும்,
வெளிப்புறம் சிவப்பாகவும் உள்ள அரிதான மண் பாண்டமும் கிடைத்துள் ளது.
பழங்கால பொருள் கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், ஆராய்ச்சிக் காலத்தை
நீட்டிக்கும்படி அனுமதி கேட்டுள்ளோம். இந்த அகழ்வாராய்ச்சிக்கு,
பள்ளிச்சந்தை புதூரைச் சேர்ந்த சோணை மகன் சந்திரன், அப்துல்ஜபார் மகன்
திலீப்கான் ஆகி யோர் அவர்களது சொந்த தென்னந்தோப்பை மன முவந்து வழங்கி உள்ள
னர் என்றார்.

0 comments:
Post a Comment